துவையல் ஆகாதிருப்பதற்கு…….

துவையல் ஆகாதிருப்பதற்கு…….

இவைகள் தவறு என்றுணர்ந்து,
இனிநான் செய்யேன் என்றோமா?
எவைகள் நேர்மை என்றறிந்து,
யானும் செய்வேன் என்போமா?
அவையில் நன்றாய் பேசிவிட்டு,
அதற்கு எதிராய்ச் சென்றோமா?
துவையல் ஆகாதிருப்பதற்கு,
தூய்மை நாடிச் செல்வோமா?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: food
LikeShow More Reactions

Comment

Comments

நிலைவாழ்வு எங்கே?

நிலைவாழ்வு எங்கே?

இலையுதிர் காலம் என்பவரே,
இங்கு விழுவதோ பழங்களே!
மலைபோல் உயர்ந்து நின்றவரே,
மறைய இவரிலை கிழங்களே.
சிலையென அமர்ந்த வீட்டாரே,
செய்தி கேட்டு எழுங்களே.
நிலை வாழ்வெங்கெனக் கேட்டீரே.
நேர்மை இறையிடம், தொழுங்களே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: Bhakther Solomon, smiling, close-up

அறிவின் எல்லை!

அறிவு இல்லை, அறிவின் எல்லை!

வாழ்வு வழியாம் உண்மை விட்டு,
வையம் கொடுக்கும் உயர்வைப் பெற்று,
ஆள்வேன் நானும் புவிமேல் என்று, 
அடியன் சென்றால் அறிவு இல்லை!

தாழ்வில் என்னைக் கண்டுகொண்டு,
தாங்கி என்னைச் சுமந்துகொண்டு,
பாழ்பட்டோரை மீட்க இன்று,
பயன்படுத்துபவரே, அறிவின் எல்லை!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: text

இறைவனே கண் பாரய்யா!

இறைவனே கண் பாரய்யா!

செத்தவனைக் கொன்றவனாக்கிக்
கொல்பவனை உத்தமனாக்கும்,
கொடியரின் உலகமய்யா.
கோடிகளின் கலகமய்யா.

வித்தவனைத் தின்றவனாக்கித்
தின்றவனை வித்தகனாக்கும்,
வீணரின் கூட்டமய்யா;
வேண்டாம் ஆட்டமய்யா.

சத்துணவை முட்டையாக்கி,
முட்டையைக் காசுமாக்கிச்
சாப்பிட்டார் அலுவரய்யா;
சரியென்பார் தலைவரய்யா.

மொத்தமும் ஊழல் என்றால்,
முழுகுவோர் அறிவர் என்றால்,
இத்தரை வேண்டாமய்யா;
இறைவனே, கண்பாரய்யா!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: food

பாலை நிலத்தில் இறைவாக்கு!

பாலை நிலத்தில் இறைவாக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:1-2.
1 திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
பாலை நிலத்தில் ஒலிக்குதய்யா;
படைத்தோன் வாக்கு பலிக்குதய்யா.
மாலைப் பொழுது நெருங்குதய்யா;
மகிழ்வும் மறைய விரும்புதய்யா.
நூலைப் போன்று உடையிருக்கும்;
நுண்மதி கொண்டு எண்ணுமய்யா;
வேலைக் கேற்ப விளைவிருக்கும்;
விண்ணின் விருப்பைப் பண்ணுமய்யா!
ஆமென்.

பேறாகும்!

பேறாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2:51-52.
51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்.
52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்றோருக்குப் பணிந்து நடத்தல்,
பிள்ளையின் வாழ்வில் பேறாகும்.
கற்றோர் உணர்ந்து கடைபிடிப்பின்,
காணும் இன்பம் நூறாகும்.
சுற்றும் உலகில் சேர்ந்து வாழ்தல்,
சுமையை இறக்கும் அருளாகும்.
மற்றோர் மகிழ நன்மை செய்வின்
மனித வாழ்க்கை பொருளாகும்!
ஆமென்.

Image may contain: text

History

History of the common man!

History is always the story of the victors. The victims and the vanquished play either no role or negative role. This is true everywhere and everytime. But the history of the Church flows down from a Victim who was supposed to be vanquished by those who were in power then. Other active players of the Church history were also ordinary men and women, who were treated like scum, if I can use the word of St.Paul. History, that is centred around kings and kingdoms leads to subjugation, subordination and suppression. On the other hand, if historians focus on the common man it can uproot all despotic evils that we see in India. Wake up historians, wake up!

Image may contain: 1 person, text and close-up

அறிவைத் தாரும் ஆண்டவரே!

அறிவைத் தாரும் ஆண்டவரே!
இறைவாக்கு: லூக்கா 2:48-50.
48 தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50 தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

இறைவாழ்வு:
காணும் கண்கள் இரண்டிருந்தும்,
காட்சியின் பொருளோ தெரியவில்லை.
பேணும் காதுகள் இரண்டிருந்தும்,
பேச்சின் ஆழமும் புரியவில்லை.
நாணும் என்னை உதறாமல்,
நல்லறிவாலே திருத்திடுமே.
வேணும் எனக்கு உம் கண்ணும்,
விண்ணின் காதும், பொருத்திடுமே!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

துணிவு பிறக்கும்!

துணிவு பிறக்கும்!

நேர்மை கொள்வீர்,
துணிவு பிறக்கும்.
நிம்மதி வேண்டின்,
பணிவு திறக்கும்.
யாரிதை ஏற்பார்?
எண்ணம் கெடுக்கும்.
இறைவன் அருளே,
இவற்றைக் கொடுக்கும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 3 people, people smiling, people standing and text
LikeShow More Reactions

Comment