மறக்காதீர்! இறக்காதீர்!

மறக்காதீர்! இறக்காதீர்!

மார்வாடி செட்டியர் வர்த்தகம்போல்,
மக்கள் ஆட்சி நடக்குமெனில்,
ஏர்வாடி மனநலக் காப்பகங்கள்,
இங்கே பெருகும்; மறக்காதீர்!
போராடி அழுவோர் உரிமைகளைப்
புரியும் அரசு இருக்குமெனில்,
சீராடி உயரும் நம் வாழ்வு;
சிறியரைத் தாழ இறக்காதீர்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, standing
LikeShow More Reactions

Comment

வெளியே தெரியா வெறி!

வெளியே தெரியா வெறி!

வெளியே சிரித்து, உள்ளே மறைத்து,
வெறித்தனம் கொள்ளும் ஒருகூட்டம்.
தெளிவாய்த் திட்டம் தீட்டுவதாலும்,
தெரியாதிருக்கும் இவ்வட்டம்.
எளிதாய் எவரும் அறியாதிருக்க,
இவர்களுக்கிருக்கும் பல பட்டம்.
புளியாம் இவரை இனிக்க வைக்க,
புரிவோம் அன்பின் திருச்சட்டம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

Comments

ஏழையின் நல்லுயர்வே!

ஏழையின் நல்லுயர்வே!

ஐந்தினைக் கொடுத்து ஐநூறெடுக்கும்,
அரசியல் வித்தகரே,
மந்தைகள்போன்று, மக்களை விற்கும்,
மாபெரும் வர்த்தகரே,
விந்தைகள் புரிந்து, வங்கிகள் ஏய்க்கும்
வேந்தர்கள் நல்லுறவே,
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது,
ஏழையின் நல்லுயர்வே.

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

திருவட்டாறு

திருவட்டாறே!

வளமிகு வட்டாறே,
வந்து பாய்வதோ பருளியாறே.
இளமையில் கண்டவாறே,
இன்றும் இருக்கின்றாயே.
குளமெலாம் பாயும் நீரே;
கொடுக்கிறாள் கோதையாறே.
அளவிட அறியாதாரே,
அழகு வேறென்பாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: sky, mountain, bridge, outdoor and nature

விடுதலை நாள் விழா!

விடுதலை நாள் விழா!

இரவில் வந்த விடுதலையை,
இன்று பகலில் நினைந்திட்டோம்.
உறவில் வாழும் குடியிருப்பில்,
ஒற்றுமை மழையில் நனைந்திட்டோம்.
சிறகில் வைத்துப் பறப்பதற்கு,
செய்வோம் நற்பணி என்றிட்டோம்.
விரைவில் நாடு வளருமென,
வேண்டி, வீடு சென்றிட்டோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and people standing

விடுதலை நாள் வாழ்த்துகள்!

விடுதலை நாள் வாழ்த்துகள்!

உணவு வரும், உடையும் வரும்.
உறைவிடமும் கூட வரும்.
உரிமை வரும், உயர்வு வரும்;
ஊர் முழுக்க நன்மை வரும்.
கனவில் வரும், காட்சி தரும்,
களிப்பெல்லாம் வந்திடுமோ?
கால் வயிறும் நிரம்பார்க்கு,
காந்தி நாடு தந்திடுமோ?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people, outdoor
LikeShow More Reactions

Comment

பொய்மை எரியும்!

பொய்மை எரியும்!
கிறித்துவின் வாக்கு:4:17-18.
17 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.

கிறித்துவில் வாழ்வு:
நெல்லுக்கு மட்டும் மழையைப் பொழிந்து,
நேர்மை என்கிற இறைவனில்லை.
புல்லுக்கும் கொடுத்து, களையும் வளர்க்கும்,
பொறுமைப் பண்பில் குறைவுமில்லை.
நல்லார் எனினும், அறுவடை நாளில்,
நல்மணி பிரிப்பார், தவறுமில்லை.
பொல்லாப்பழியும், பொய்மை எரியும்,
போக்குச் சொல்லவும் எவருமில்லை!
ஆமென்.

Image may contain: one or more people, people standing, outdoor and nature
LikeShow More Reactions

Comment

கிறித்துவுள் முழுக வாரீர்!

கிறித்துவுள் முழுக வாரீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:15-16.

15 யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.

கிறித்துவில் வாழ்வு:
நீரில் மூழ்கி எழும்பிவிட்டால்,
நேரே விண்ணென எண்ணாதீர்!
பாரில் இப்படி நினைத்துவிட்டு,
பலரை மூழ்கப் பண்ணாதீர்!
போரில் கிறித்தவன் வெல்வதற்கு,
புனித எரிப்பில் முழுகட்டும்.
நேரில் வந்து முழுக்குகின்ற,
நேர்மை வாக்கில் ஒழுகட்டும்!
ஆமென்.

Image may contain: one or more people, sky, tree, outdoor and nature
LikeShow More Reactions

Comment

பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்!

பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:14.
14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்;
போதாதெனக் கை நீட்டாதீர்.
மெய்யாய்த் தீங்கு செய்யாதீர்.
மேன்மையாவீர், அய்யா நீர்!
உய்யாதிருப்பவர் வாங்குகிறார்;
உண்மை விட்டு நீங்குகிறார்.
அய்யா, அவர்போல் ஆளாதீர்;
அறிவற்றவராய் மாளாதீர்!
ஆமென்.

Image may contain: 2 people, including Senthil Kumaran, people smiling, hat

Like

Like
Love
Haha
Wow
Sad
Angry

Comment

Comments

தமிழ் வெள்ளம்!

தமிழ் வெள்ளம்!

இன்னும் தூய்மையாய் இருந்திருப்பின்,
என்னைப் போன்றோர் மகிழ்ந்திருப்பார்.
ஒன்றும் குறையாய்க் கூறாமல்,
பொன்னாய் மணியாய்ப் புகழ்ந்திருப்பார்.
என்றாலும் உன் மொழிப்பற்றால்,
வென்றாய் எங்கள் உள்ளத்தை.
நன்றாய்ப் புகழ்வேன் நானுந்தான்,
குன்றா தமிழ் வெள்ளத்தை!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text