யாருக்குப் புகழ்ச்சி?

யாருக்குப் புகழ்ச்சி?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:24-26.

24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
தம்மை அனுப்பிய தந்தை மகிழத்
தரணியில் இயேசு வாழ்ந்தாரே.
நம்மை அனுப்பும் மைந்தன் மகிழ,
நன்மை செய்து வாழ்ந்தோமா?
உம்மை ஒருவர் இப்படிக் கேட்பின்,
உமது வாழ்க்கை என் சொல்லும்?
செம்மை இல்லை என்பதனாலே,
சீர்பட இயேசு முன் நில்லும்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

மன்னிப்பு!

மன்னிப்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 5:20-23.
20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

கிறித்துவில் வாழ்வு:
உடற் பிணி வந்தால், மருத்துவர் உண்டு.
உளப் பிணியாளர்க்கும் மருத்துவம் உண்டு
திடப்படுத்தலுக்கும் பலபேர் உண்டு.
தீவினை தீர்க்க வழி எங்குண்டு?
கடல் போல் தெரியும் வாழ்க்கை உண்டு.
கவிழ்ந்த படகில் விழுந்தவர் உண்டு.
அடம் பிடிக்காமல் வருபவர் உண்டு.
அவரை மீட்க மன்னிப்புண்டு!
ஆமென்.

Image may contain: sky and outdoor
LikeShow More Reactions

மற்றவர் பற்று!

மற்றவர் பற்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:18-19.
18 அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
19 ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
உந்தன் பற்று உம்மை மீட்கும்;
உரைத்தார் இயேசு பலமுறை அன்று.
சொந்தப் பற்று தொய்யும்போது,
சொந்தம் வந்து தூக்குதல் உண்டு.
இந்தப் புலவன் மீட்பிற்கென்று,
இவனது பெற்றோர் ஏங்கியதுண்டு.
அந்தப் பற்றை ஏற்றுக்கொண்ட,
ஆண்டவரால்தான் வாழ்வு இன்று!
ஆமென்.

Image may contain: one or more people and text
LikeShow More Reactions

முதன்மை மருத்துவர்!

Image may contain: one or more people and text

முதன்மை மருத்துவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா5:17.
17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறபோது கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.
 
கிறித்துவில் வாழ்வு:
அறிவிற்கு அப்பால் அமைதி என்றானால்,
அதனை அளிப்பவர், யார் நண்பா?
முறிவிற்கும் நோய்க்கும் மருந்திலை என்றால்,
முதன்மை மருத்துவர், யார் அன்பா?
நெறிமுறை கெடுப்பதே வாழ்க்கை என்றானால்,
நேர்மை யாரிடம், பார் நண்பா.
குறிதவறாது வாழ்வதற்கென்றால்,
கிறித்து அரசரைப் பார் அன்பா!
ஆமென்.

இறைவேண்டல்

Gershom Chelliah

04:23 (0 minutes ago)

prayer-mother-teresa.jpg

இறைவேண்டல் ஏறெடுப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:15-16.
15 அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
கூட்டாய், குழுவாய் வேண்டுதல் நன்று;
குடும்பம் இணைந்து கேட்பதும் நன்று.
பாட்டாய்ப் பாடி படைத்தலும் நன்று;
பன்முறை நாளில் தனித்தலும் நன்று.
ஆட்டம் போட்டு கேட்பது அன்று,
ஆண்டவர் விருப்பை அறிவோம் இன்று.
பூட்டைத் திறக்கும் கோலைப் போன்று,
புனிதரின் ஆவியில் கேட்பதே நன்று!
ஆமென்.

விளம்பரம் செய்யாதீர்!

thequint%2F2016-01%2F87c28cb9-3dd2-4095-88bf-8584433e9bab%2FGladysDaughter.jpg

விளம்பரம் செய்யாதீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா:14.
14 அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குச் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
கிறித்துவில் வாழ்வு:
ஓன்று செய்தால் ஒன்பது என்னும்
ஊரைத்தானே பார்க்கிறோம்.
இன்று எதுவும் செய்யாதோரை,
இங்கே தலைவராய்ச் சேர்க்கிறோம்!
அன்று இயேசு சொன்னது பாரும்;
அமைதி ஊழியம் நிரந்தரம்.
தொண்டு செய்வோர் புகழ்ச்சி தேடின்,
தொழுநோய் aakum விளம்பரம்!
ஆமென்.

விடைக்குள் வராத விருப்பம்!

விடைக்குள் வராத விருப்பம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:12-13.
12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

கிறித்துவில் வாழ்வு:
படைக்கப்பட்டதில் நோக்கமுண்டு;
படைத்த இறையிடம் கேட்டிடுவோம்.
கிடைக்கப்பெற்றதில் நோக்கமுண்டு;
கிறித்து அற்றதை விட்டிடுவோம்.
உடைக்கப்பட்டதில் நோக்கமுண்டு;
ஒற்றுமை ஆவியுள் கூட்டிடுவோம்.
விடைக்குள் வராத ஏக்கமுண்டு;
விண்ணரசரிடம் காட்டிடுவோம்!
ஆமென்.

Image may contain: plant, outdoor and text
LikeShow More Reactions

Comment

அக்கா-தங்கை.

அக்கா- தங்கையுடன்!

எக்கோலம் கொண்டாலும், கையூட்டு வேண்டாம்;
என்று பணி செய்தவருள், எம் தந்தை உண்டாம்.
இக்கால நல்வாழ்வு, தாயின் மன்றாட்டாம்;
இதன்படி வாழ்கின்ற இவரே என் கூட்டாம்!

-கெர்சோம் செல்லையா

Image may contain: Maby Sundar, Thirugnanam Mylapore Perumal and Bhavani Jeeja Devaraj, people standing and indoor

எளிமையிலே வலிமை!

எளிமையிலே வலிமை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:10-11.
10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
யானை வலிமை இருந்தால்தானே,
எதையும் செய்ய முடியுமென்பார்.
சேனை திரண்டு சென்றால்தானே,
செருவில் வெற்றி படியுமென்பார்.
வானை விடுத்த இறைவனின் மகனோ,
வலிமையை எளிமையில் காட்டுகிறார்.
மீனை பிடிக்கிற ஏழையராலே,
மீட்பின் அரசை நாட்டுகிறார்!
ஆமென்.

Image may contain: 1 person, standing, ocean, child, outdoor and water
LikeShow More Reactions

Comment

சீர்படுத்தும் இறையே!

சீர்படுத்தும் இறையே!

கிறித்துவின்  வாக்கு:லூக்கா 5:8-9.
8 சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
9 அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
அய்யா, உம் அடி வரும் வரையில்,
அநீதி, தவற்றையும் வான் புகழ்ந்தேன்.
பொய்யாய் என்னை மேலுயர்த்திப்
புனித வடிவிலும் நான் திகழ்ந்தேன்.
மெய்யாம் உம்மிடம் வந்த பின்னர்,
மேன்மையறிந்து எனை இகழ்ந்தேன்.
செய்யாதவையுடன் செய்தவையும்,
சீர் படுத்தும்மில், இனி மகிழ்வேன்!
ஆமென்.