விளக்கு!

விளக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:8-10.
8   அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?9   கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?10  அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


கிறித்துவில் வாழ்வு:

காணாமல்போன, காசைத் தேட,

கையிலெடுத்தாள் விளக்கு.

தானாக வருமே என்றுயிராமல்,

தன்வீடு துடைத்ததை, விளக்கு.

கோணாமல் நேர்வழி செல்லுவதற்கு,

கொளுத்த வேண்டும் விளக்கு.

நாணாத வாழ்வை, நம்மிறை தருவார்;

நன்மை செய்து விளக்கு!

ஆமென்.

கருப்பு ஆட்டின் கதை!

கருப்பு ஆட்டின் கதை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:5-7.
5 கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,6 வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
இருப்பு இருந்தால், இன்பம் ஆகும்;
இழந்து பெற்றால், இரட்டிப்பாகும்.
கருப்பு ஆட்டின் கதையிது ஆகும்;
கடவுட்மீட்போ, பேரின்பமாகும்.
விருப்பு மாறின் என்ன ஆகும்?
விழுந்த ஆட்டின் கதைபோலாகும்.
திருப்புவதுவும் இறைமகன் ஆகும்;
திரும்புதலுமோ பேரின்பமாகும்!
ஆமென்.

இயேசுவே எனது நல்மேய்ப்பர்

இயேசுவே எனது நல் மேய்ப்பன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:3-4.

3   அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

4   உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கிறித்துவில் வாழ்வு:

ஒராடுதானே ஓடியதென்று,

ஓய்ந்திருப்பானோ ஒரு மேய்ப்பன்?

போராடியேனும் அதனை மீட்க,

புறப்படுவானே நம் மேய்ப்பன்.

யாராயிருப்பினும் புறக்கணிக்காது,

எழுந்து மீட்கிறார் இறை மேய்ப்பன்.

நூறாயிரம் பாடல் எழுதிச் சொல்வேன்;

இயேசுவே எனது நல் மேய்ப்பன்!

ஆமென்.

நமது பார்வை!

எப்படிப் பிறரைப் பார்க்கிறோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:1-2.

1   சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

2   அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

எதிரே நிற்போர் ஏழை என்றால்,

எவரும் திரும்பிப் பாராரே.

புதிரை நம்பும் சாதியர்கூட,

புனிதம் பேசிச் சேராரே.

மதிப்பார் என்ற சொல்லினுள்ளே,

மதி இருத்தல் அறியாரே,

விதிக்காக நான் சொல்லவில்லை;

விண்முன் யாவரும் சிறியாரே!

ஆமென்.

உப்பும் நாமும்!

உப்பாயிருப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா14:34-35.

34  உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

35  அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

உப்பின் ருசியை உணவில் கலக்க, 

உண்பவர் வாயில் தேன் ஊறும்.

அப்புறம் உண்பேன் என்பவர்கூட,

அன்பாய்க் கெஞ்சும் நிலை பாரும்.

சப்பென உணவு சுவையற்றிருந்தால்,

சாப்பிடும் வாய்கள் குறை கூறும்.

குப்பையென்று கொட்டாதிருக்க,

கொஞ்சம் உப்பாகவே மாறும்!

ஆமென். 

தன்னலம் வெறுத்தல்!

தன்னை அறிதல்! கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.கிறித்துவில் வாழ்வு:என்னை அளக்க, எனக்கு உதவும்,என்று ஒருவன் முன்வந்தால்,தன்னை அறியும், தன் திறன் புரியும்,தன்மையைக் கடவுள் தந்திடுவார்.முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!ஆமென்.

தன்னை அறிதல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.கிறித்துவில் வாழ்வு:என்னை அளக்க, எனக்கு உதவும்,என்று ஒருவன் முன்வந்தால்,தன்னை அறியும், தன் திறன் புரியும்,தன்மையைக் கடவுள் தந்திடுவார்.முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!ஆமென்.

தன்னை அறிதல்! கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

என்னை அளக்க, எனக்கு உதவும்,

என்று ஒருவன் முன்வந்தால்,

தன்னை அறியும், தன் திறன் புரியும்,

தன்மையைக் கடவுள் தந்திடுவார்.

முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,

முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,

இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;

எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!

ஆமென்.

தொடங்குவார் பலபேர்….

தொடங்கும் பலர் முடிப்பதில்லை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:28-30.

28  உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,

29  அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:

30  இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?

கிறித்துவில் வாழ்வு:

தொடங்கிய பலபேர் முடிப்பதில்லை;

தொடர விரும்பியும் முடிவதில்லை.

கிடங்குகள் நிறையப் பொருளிருந்தும்,

கிறித்து இலாததால், படியவில்லை.

முடங்கிட விரும்பா கிறித்தவரோ,

முதலில் இறைவன் முடிவறிவார்.

அடங்கிய நெஞ்சு அமைந்தவராய்,

ஆண்டவர் முடிக்க, அடிநடப்பார்!

ஆமென்.

அனைவர்க்குதவுதல்!

இங்குள்ள உறவுகள் சிலநாள்தானே!கிறித்துவின் வாக்கு: லூக்கா14:25-27.

25  பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:

26  யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

27  தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

இங்குள்ள உறவுகள் சில நாள்தானே;

இவர்களைக் காப்பதும் இறைவன்தானே.

எங்குமெதிலும் உறவினைத்தானே,

ஏந்திப் பிடித்தல், குற்றந்தானே.

பங்கங்கலவா ஊழியமாமே;

பாரினில் கிறித்து கொடுத்தாராமே.

அங்கமென்று அவருடன் நாமே,

அனைவர்க்குதவல் ஏற்றதாமே!

ஆமென்.

அழைக்கப்பட்டோர்!

அழைக்கப்பட்டோர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:21-24.

21  அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.

22  ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.

23  அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;

24  அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.

கிறித்துவில் வாழ்வு:

அழைக்கப்பட்ட இனம் அன்று,

ஆண்டவர் விருந்தை ஏற்காது,

பிழைப்பே வாழ்வு என்றதனால்,

பிறர்முன் அழிந்தது, அறிவீரே.

உழைப்பை நம்பும் இனமின்று,

ஒழுகும் அருளை ஏற்காது,

தழைக்கத் தவறும் செய்வதனால்,

தாழ்வடைவது, தெரிவீரே!

ஆமென்.

சிற்றின்பம்!

சிற்றின்பத்தால் சிறுமதி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:20.
20 வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்
கிறித்துவில் வாழ்வு:
போருக்கு வீரர் போகும் நாளில்,

புதுமணமானோர் விலக்கடைந்தார்.


பாருக்கு அப்படி விதியிருந்தாலும்,

பற்றுடன் சென்றோர் பலரிருந்தார்.


சீருக்கு உயர்ந்த விருந்து என்றால்,

சீக்கிரமாகவே, கலந்திடுவார்.


யாருக்கு வேண்டும் என்றுகேட்டால்,

யாவுமிழந்து அலைந்திடுவார்!


ஆமென்.