பாறையாம் கிறித்து!

பாறையாம் கிறித்து!

பாறையின்மேலே, விழுந்ததனாலே,
பாவியர் நொறுங்கி ஓய்ந்திட்டார்.
கூரையைப்போலே, பாறைகல் விழவே,
கொடியர் நசுங்கி மாய்ந்திட்டார்!
தேரையாய் அடியர் தெரியாமலேயே,
தெய்வப் பாறையுள் வாழ்ந்திட்டார்.
நீரையும் வழங்கி, நிலைவாழ்வளித்தார்;
நினையாரேதான் தாழ்ந்திட்டார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text

யார் நம் உறவு?

யார் நம் உறவு?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:19-21.
19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
20 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
யார் நம்மோடு இருப்பார் என்றால்,
அண்ணன் தம்பியர் வருவதில்லை.
ஊர் பண்பாடும் உறவின் உயர்வாம்
அன்னையும் உதவி தருவதில்லை.
பார் படைத்தவரின் பணியினில் சேர,
பலருக்கு இன்று எண்ணமில்லை.
சீர் மிகு செய்தியாய் வாழ்வார் உறவே
சிறந்தது, வேறு மண்ணிலில்லை!
ஆமென்.

No photo description available.

பெருகட்டும், பெருகட்டும்!

பெருகட்டும், பெருகட்டும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:17-18.
17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
18

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
ஆண்டவர் அளிக்கும் அருளும் பெருகும்;
அதனை அறிபவர் பற்றும் பெருகும்.
மீண்டவர் வாழ்வில் நன்மை பெருகும்.
மேன்மை வழியாம் அன்பும் பெருகும்.
வேண்டுதல் செய்ய வலுவும் பெருகும்;
விடுதலை ஆவியர் வரமும் பெருகும்.
கூண்டிலிருப்பின் எப்படிப் பெருகும்?
கிறித்துவாலே எல்லாம் பெருகும்!
ஆமென்.

No photo description available.

எப்படி வெளிச்சம் வீசுகிறோம்?

எப்படி வெளிச்சம் வீசுகிறோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:16.
16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
கொளுத்திய விளக்கைக் குடத்தினுள் மறைத்தால்
கொடுக்குமோ நமக்குப் பெருவெளிச்சம்?
எழுத்தினில் சொல்வதை இயல்பினில் திரித்தால்,
ஏற்படுமோ இனி இறைவிருப்பம்?
அழுத்திடும் பேரவா இழுத்துப் பிடித்தால்,
அந்நலம் தன்னலம், அழித்துவிடு.
மழுப்பிடும் பதிலால் பயனெதுமில்லை.
மறைபொருள் தெரிய மனது கொடு!
ஆமென்.

Image may contain: text

அன்னை கிளாறி பெல் செல்லையா

அன்னை கிளாறி பெல் செல்லையாவின்
நினைவு நாள் – 14-02-1990.

ஒருமுறைப் பெற்றிடும் அன்னையர் நடுவில்,
இருமுறை எம்மைப் பெற்றவரே,
திருமறை ஊட்டித் தெய்வம் அறியத்
திருப்பும் வலியும் உற்றவரே,
அருமையாய் ஈந்த அறுவரும் இன்று,
அமைதியில் உம்மை நினைந்தோமே.
மறுமுறை இறைமுன் காணும் வரையில்,
மாபெரும் அன்பில் நனைந்தோமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person
Like

நல்ல நிலமாவோம்!

நல்ல நிலமாவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:15.
15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பாதை, பாறை, முள்ளாயிருந்தேன்;
பயனற்றவனாய்ப் பாழாய்த் திரிந்தேன்.
தீதை நம்பித் தீமைச் செய்தேன்;
தீங்கைத்தானே திரும்பக் கொய்தேன்.
பேதை நானும் இறைமுன் வந்தேன்;
பிழைகள் திருத்தப் பயனும் தந்தேன்.
தூதை ஏற்றுத் துயரும் பொறுத்தேன்;
தூயோன் அருளால் விளைச்சல் அறுத்தேன்.
ஆமென்.

Image may contain: sky, grass, outdoor and nature

இரக்கம்!

இரக்கம் என்னும் இறையின் பண்பு!

இரக்கம் என்பது இறையின் பண்பு.
இதனால்தானே இருக்கிறோம் இன்று.
உருக்கம் கொண்ட இயேசு போன்று,
உதவி செய்வதே எவர்க்கும் நன்று.
மறுக்கும் நண்பர் பலபேர் உண்டு;
மாறுவர் ஒருநாள் உண்மை கண்டு.
பெருக்கும் செல்வம் அன்புகொண்டு,
பேருலகிற்குச் செய்வோம் தொண்டு!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, people sitting, table and indoor

முள்ளுடன் வளர்ந்த செடிகள்!

முள்ளுடன் வளர்ந்த செடிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:14.
14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கொள்ளும் கவலை ஒருபக்கம்,
கோடிகள் தேடல் மறுபக்கம்;
அள்ளும் இன்பத்தால் நெருக்கம்.
அவர்கள் வளர்வது எப்பக்கம்?
தெள்ளத் தெளிவாய் தெரிந்திடுவோம்;
தெய்வ வாக்கைப் புரிந்திடுவோம்.
உள்ளும் புறமும் வளர்வதற்கு,
ஒவ்வாப் பண்புகள் உரிந்திடுவோம்!
ஆமென்.

Image may contain: plant, tree, outdoor and nature
Comments

பாறையில் விழுந்தவை!

பாறையில் விழுந்தவை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:13.
13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சொல்லை அழகாய்ப் பாடலாக்கிச்
சொன்னால், ஆமாம் என்றிடுவார்.
கல்லைக் காட்டும் நெஞ்சம் மறைத்துக்
கயமையின் கூட்டாய் நின்றிடுவார்.
இல்லை இவரில் நன்மை என்று,
எளியோர் வருந்திச் சென்றிடுவார்.
எல்லாம் அறிந்த இறைவன் ஒருநாள்,
யாவையும் பொடித்து வென்றிடுவார்!
ஆமென்.

Image may contain: outdoor
Like

மாட்டுப் பொங்கல் நாளில்,

மாட்டுப் பொங்கல் நாளில்,
மறைந்த எங்கள் தந்தை
கொ.செல்லையா அவர்களின்,
15-ஆம் ஆண்டு நினைவு நாள்!

கோடாய், குன்றாய், குளிரும் ஆறாய்,
வாடாதிருக்கும் வளத்தில் நூறாய்,
தேடாரையுமே இழுக்கும் பேறாய்,
தெரியும் எங்கள் திருவட்டாறே!
கேடாய் கையில் வாங்காய் என்று,
கெடுவார் முன்பு உரைத்து அன்று,
மாடாய் உழைத்த தந்தை இன்று,
மறைந்த நாளை மறந்திட்டாயே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people