உணவாகிய இறைவிருப்பு!

இறைவிருப்பென்னும் உணவு!
நற்செய்தி: யோவான் 4:31-34.

நல்வழி:

உண்ணும் உணவு எவ்வாறுண்டு?
ஒவ்வோர் ஊரில் வெவ்வேறுண்டு.

எண்ணும் அறிவு எதுபோலுண்டு?

எளியோர் உணவு, அதுபோலுண்டு. 

விண்ணின் முடிவு எங்கனமுண்டு?


விருந்து சுவையின் மங்கலமுண்டு!

தின்னும் மக்கள் எங்கேயுண்டு?


தெய்வ அரசில் இங்கேயுண்டு!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அறிவித்தல்!

அறிவித்தல்! 
நற்செய்தி: யோவான் 4:28-30.

நல்வழி: 


அறிந்து கொண்ட அப்பெண்ணும்,   

அறிவிப்பதற்கு ஓடுகிறாள். 

தெரிந்து மறந்த அவளூரும், 

தெய்வம் காண நாடுகிறாள். 

பரிந்து பேசும் இறைமகனும்,


பழிப்போர் மீளத் தேடுகிறார்.

புரிந்து நாமும் அறிவிப்போம்;


புனிதர் அன்பில் பாடுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏன் எழுதுகிறேன்?

ஏன் எழுதுகிறேன்?

எண்ணி விதைப்பது பலவாகும்.
எழுத்தில் காய்ப்பது சிலவாகும்.
பண்ணும் பாடல் கனியாகும்;

பகிர்நதால் மட்டும், இனிதாகும்.

கண்ணைத் திறப்பது வாக்காகும்;

கடவுளைக் காட்டும் நோக்காகும்.
விண்ணின் விருப்பே சீராகும்;
விருந்தாய் ஏற்போம், பேறாகும்!

-கெர்சோம் செல்லையா.

Duthie Girls’ school

DUTHIE GIRLS HR.SEC School-NAGERCOIL – Tamil Nadu – was established by the Christian Missionaries in 1819. It was the first school for girls in southern India. If our historians can write truthfully, it may be the first or the second one even in India! Nevertheless, this is our failure to identify the right thing in the right time! We have failed to think about the services rendered by the Christian Missionaries to us.We have failed to bring out our gratitude, that remains silently within us.Today is Social Justice Day. Let us remember those noble souls who brought us here to see the wisdom of creation and taught us to proclaim that, ALL ARE EQUAL IN THE EYES OF GOD!-Gershom Chelliah.

பெண்ணிடம் பேசுதல்!

பெண்ணிடம் பேசுதல்!

நற்செய்தி: யோவான் 4:27.   

நல்வழி:


பெண்ணை மதியா அப்பழ நாளில்,

பேசிக் கொள்ளவும் தடையுண்டு.

அண்மை வந்த அப்பெண்ணிடத்தில்,


அவலங்களுக்கும் கடையுண்டு.

எண்ணம் பேச்சு எதுவென்றாலும்,

இயேசு செயலில் விடையுண்டு. 

இன்னாள் பிறரை இதுபோல் ஏற்பின்,

எங்கும் அமைதிப் படையுண்டு! 

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

அருட்பொழிவாளர்!

அருட்பொழிவாளர்!
நற்செய்தி: யோவான் 4:25-26.

நல்வழி: 


அருட்பொழிவாளர் ஒருநாள் வருவார்;

அடிமைகளுக்கு விடுதலை தருவார்.

விருப்புடன் யூதர் நோக்கி இருந்தார்;

வேற்றினத்தாரும் கேட்டுத் தெரிந்தார்.

திருவாக்குரைப்படி கிறித்துவும் வந்தார்;

தெய்வப்பாதை அமைத்தும் தந்தார்.

வெறுப்பாரிடத்தும் அன்பாய் இருந்தார்.

விடுதலையாளரும் அவர் வழி தெரிந்தார்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

உண்மை வேண்டும்!

தேவை உண்மை!

நற்செய்தி: யோவான் 4:23-24.

நல்வழி:


அறிந்து தொழுவீர் ஆண்டவரை;

ஆவியரே வழி காட்டுகிறார்.

புரிந்து கொள்கிற இறையறிவை,

புனிதர் இன்றும் ஊட்டுகிறார்.

விரிந்து பரவும் விண்ணரசை,

வேண்டும் நெஞ்சில் நாட்டுகிறார்.

தெரிந்து வாழ்வீர் கிறித்தவரே,


தேவை உண்மை, கூட்டுகிறார்!


ஆமென். 

இறை தொழுதல்!

இறை தொழுதல்!

விதி என்றிறையை, வணங்கல் உண்டு.

வினை ஒழியென்று, இணங்கலுமுண்டு.


மதி எங்கென்று, பிணங்கல் உண்டு.

மத வெறிகொண்டு, சுணங்கலுமுண்டு.

சதி பகை விட்டு, எழுதல் உண்டோ?

சமமாய்க் கருதும், தழுவலுமுண்டோ?


கதியே இறையென விழுதல் உண்டோ?


கண்ணீரகற்றும் தொழுதலுமுண்டோ?


-கெர்சோம் செல்லையா.

யூதர்!

யூத இனத்தின் பெருமை!  

நற்செய்தி: யோவான் 4:22

நல்வழி: 

அறிவைத் தேடின கிரேக்கரென்றாலும்,

ஆற்றலில் உயர்ந்த உரோமரென்றாலும்,

வெறியுடன் எழுந்த வேற்றினத்தாளும், 

வியந்து எதனை யூதரில் கண்டார்?

நெறிமுறையான மறைவாக்குகளும்,

நேர்வழி சொன்ன இறைவாக்கினரும், 

புரிந்திட இயலா புனிதரின் மீட்பும்,

புவியோரடைந்தது யூதரில் என்பார்!

ஆமென்.  


-செல்லையா.

மறையோம் நாம்!

மறைந்து போகிற   வாழ்க்கை!

மறந்து போகிற மனிதக் குழுவில், 

மறையாதிருப்போர் ஒரு சிலரே. 

திறந்து வைக்கிற அவரது வாழ்வில்,

தெரிகிற உண்மையும் ஒரு சிலவே.

பிறந்து இறந்து மறந்து போகிற,

பெருந்திரளில் மறையும் நாம்,

சிறந்து விளங்க, ஒன்று செய்வோம்.

சிறியருக்கிரங்க,  மறையோம் நாம்!


-கெர்சோம் செல்லையா.