உன்னைப் பேறு பெற்றோனாக்கி,

உன் வழி உலகு பேறுறச் செய்வேன்.

என்றிறை மொழிந்த வாக்கை நம்பி,

எழுந்தவருக்கோ பிள்ளையில்லை.

நின்று நடந்து நிமிர்ந்து நோக்கி,

நின் கண் காணும் விண்மீன் எண்ணு.

ஒன்று குறையா மக்களைத் தருவேன்.

உரைக்கும் வாக்கோ கள்ளமில்லை!

(தொடக்க நூல் 15:1-21).

May be an illustration of 1 person

எழுபத்தைந்து அகவை முடித்தும்,

இளைஞனாக ஆபிராம் நடந்தார்.

பழுது இல்லாப் பற்றை பிடித்தும்,

பார்த்திராத நாடுகள் கடந்தார்.

தொழுது கொள்ள எண்ணின் கேளீர்.

தூய ஆபிராம் பற்றும் பாரீர்.

விழுது போன்ற உறவுகள் இழுக்கும்.

விட்டுவிட்டு இறை பின் வாரீர்!

(தொடக்க நூல் 12:4-5).

May be an image of map and text that says 'Haran Caspian Sea N Euphrates Tigris Mediterranean Sea Shechem Jerusalem Bethel River River Ur of the Chaldeans 100 Mi. River Nile Red Sea 0 100 100Km. Km. Persian Gulf'

மீட்பின் திட்டம்!

4. மீட்பின் திட்டம்!

பேர் புகழ் தேடிச் செல்வது சிறப்பா?

பேரிறை வழங்க, பெறுவது சிறப்பா?

யார் இதைப் புரிந்து நடக்கின்றாரோ,

இறையால் அவரும் பேறடையாரோ?

ஊர் எனும் ஊரில் ஒருவர் இருந்தார்.

உள்ளம் முழுதும் பற்றாயிருந்தார்.

பார் படைத்தாளும் இறை அழைத்தார்;

பணிந்து ஆபிராம் கீழ்ப்படிந்தார்.

(தொடக்க நூல் 12:1-4).

May be an image of text that says 'Genesis 12:1-4 Called to be Blessed'

அப்படி அன்று இடம் பெயர்ந்து

அகிலம் முழுதும் பரவினார்.

செப்பும் மொழி வேறுபாட்டால்,

சிலர் நாட்டையும் நிறுவினார்.

ஒப்பிட இயலாச் செயல்கள் புரிந்து,

ஒரு சில அரசரும் பெருகினார்.

தப்பாய் இவரைப் பலரும் புகழ,

தாமே இறை எனத் திருகினார்!

(தொடக்கநூல் 11)

May be an illustration

எங்கும் சென்று நிறைந்து ஆள,

இறை கூறியதை மறந்தவர்

செங்குத்தான சிகரத்தில் விழ,

சிக்கிச் சிதறி இறக்கிறார்.

அங்கும் இங்கும் அலைந்து வாழ,

அரும் மொழியைத் துறந்தவர்,

பொங்கும் வேறு சொற்களில் எழ

புது மொழிகள் உரைக்கிறார்!

(தொடக்கநூல் 11:6-9).

May be an image of text

இரண்டு ஆற்றின் இடையே செழித்த

இராக்கின் பெயர்தான் சினையார்.

திரண்டு செல்வம் அங்கு கொழிக்க,

தெய்வ ஊற்றிலோ நனையார்.

மிரண்டு நோக்கிப் பார்க்கும் படிக்கு,

மேட்டிமைச் சிகரம் புனைவார்.

உருண்டு உடைகிற கல்லைப் பிடிக்க,

ஓடும் போதும் நினையார்!

(தொடக்க நூல் 11:1-10)

May be an image of temple, castle and the Tre Cime di Lavaredo

மூன்றாய் பிரிந்து நாற்றிசை சென்ற

முன்னோர் பற்பல இனம் கண்டார்.

சான்றாய் வாழ்ந்து சென்றவர் என்ற

சரியாப் புகழ் யார் கொண்டார்?

தோண்டார் என்ற நினைப்பில் தானே,

தொல்லை கொடுத்து வாழ்ந்திட்டார்.

ஆண்டான் எங்கே? அடிமை எங்கே?

அனைவரும் அடியில் தாழ்ந்திட்டார்!

(தொடக்க நூல் 10:1-32).

May be a graphic of map and text that says 'ATLANTIC OCEAN EUROP DESCENDANTS OF GOMER AND JAVAN MAGOG TARSHISH ASHKENAZ BLACK TIRAS ELISHAHT GREECE JAVAN CASPIAN SEA MESHECH RIPHATH TUBAL TOGARMAH AŞHKENAZ GOMER MADAI M”DIA ASSHUR HE MAGOG PARTHIA LUD S I DESCENDANTSOF HETH THE GREAT SEA Descendants.of Shem ARAM NIMROD ELAM MASH ARPHAXAD CAPHTORIM CANAAN (Mediterranean Sea) PERSIAN GULF PHILISTIA HAVILAH RAAMAH DEDAN SHEBA PHUT LEHABIM LIBYA LUDIM F R DEDAN c ARABIA Descendants Shem Descendants Ham Descendants of Japheth EGYPT PATHRUSIM The Descendants of Shem, Ham,and Japheth CUSH 1000 Miles JOKTAN ALAPAL HAVILAH UZAL SHEBA OPHIR ETHIOPIA Bible History Online'

மழையால் இழப்பு வந்திருந்தாலும்,

மழை வில் தோன்றி அழகு தரும்.

பிழையால் மனிதர் நொந்திருந்தாலும்,

பேரிறை உடன்படி அமைதி தரும்.

இழப்பை மறந்து இறையை நாடின்,

இயற்கையுமிரங்கி இனிமை தரும்.

உழைக்கும் மனிதர் உண்மை சூடின்,

உவக்குமிறை தர வாழ்வு வரும்!

(தொடக்க நூல் 9:7-17).

May be an image of 7 people and text

உதிரத்தில் தான் உயிர் உறைதல்;

ஒருவரையும் கொல்லாதீர்.

எதிரி என்றாலும் இறை சாயல்;

எனவே தீது சொல்லாதீர்.

பதிலாய்ச் செய்யும் பழிவாங்கல்,

பாவச்செயல், செல்லாதீர்.

அதுவே அந்நாள் உடன்படிக்கை;

அதற்கெதிராக நில்லாதீர்!

(தொடக்க நூல் 9:1-17)

May be an image of 6 people

எட்டு பேர் வெளியே வந்து

இப்புவி எங்கும் பெருக,

தொட்டு அவரை வாழ்த்தினார்,

தொடக்கமிலா இறைவன்.

கட்டு மூன்றாய் அவர் பிரிந்து,

காணும் இடம் பரவ,

விட்டு விடா உடன்படி செய்தார்,

விண்ணுலகின் அரசன்!

(தொடக்க நூல் 8:14-9:19)

May be an image of 1 person and text that says 'Japheth Ham Shem'