ஆவியார்!

உணர்த்தும் துணையாளர்!
இறை மொழி: யோவான் 16:7-8.

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

இறை வழி:

செய்யும் செயலில் நேர்மை உண்டோ?

செயலின் முடிவே தீர்ப்பாகும்.

உய்யும் எண்ணம் உள்ளில் உண்டோ?

உண்மை வந்தால் சேர்ப்பாகும். 

பொய்யா அருள் மழை ஆவியர் உண்டோ?

புகலிடம் இழுக்கும் ஈர்ப்பாகும். 

அய்யா என நாம்  செல்வது உண்டோ?

அன்பே இறையின் வார்ப்பாகும்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

சாதி!

சாதி!

சாதியைப் படைத்தவன் இறைவனல்ல,
சதி செய்திட்ட மனிதனே.
நீதியைப் பார்ப்பவன் அறிவிலியல்ல;
நெஞ்சைத் தொட்ட புனிதனே.
வீதியைப் பிரித்து வைப்பது நல்ல
வழிமுறை அல்ல, மனிதனே.
மீதி வாழ்விலே இணைந்து நல்ல
மனிதனால், புனிதனே!

-செல்லையா.

விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்துகள்!

யாதும் ஊரே, யாவரும் உறவே,
என்பது தானே பண்பாடு.
சூதும் தீதே, சூழ்ச்சியும் அதுவே;
சொன்னபடியே, பண் பாடு.
வாதும் கேடே, வளர்ப்பவர் கெட்டே
வாடுவார் என்றதே இந்நாடு.
போதும் தீங்கே, புரிந்தார் எங்கே?
புது வாழ்வையே இனி நாடு!

-கெர்சோம் செல்லையா.

இழப்பின் வலி!

இழப்பின் வலி!

இறை மொழி: யோவான் 16:4-6.

4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.  

5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.

6. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.

இறை வழி:

இழப்பின் வலியை உணராராயின்,
இரக்கம் எப்படி பிறக்கும்?
பிழைப்பிற்கென்று கொணர்வாராயின்,
பேசம் வாக்கும் பறக்கும்.

அழுது நடித்துச் செல்பவராயின், 

அவரைக் கீழே இறக்கும்.

ஏழைக்குதவி நல்குவாராயின், 
இவரால் அன்பு சிறக்கும்.

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

இழப்பின் வலி!

இழப்பின் வலி!

இறை மொழி: யோவான் 16:4-6.

4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.  

5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.

6. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.

இறை வழி:

இழப்பின் வலியை உணராராயின்,
இரக்கம் எப்படி பிறக்கும்?
பிழைப்பிற்கென்று கொணர்வாராயின்,
பேசம் வாக்கும் பறக்கும்.

அழுது நடித்துச் செல்பவராயின், 

அவரைக் கீழே இறக்கும்.

ஏழைக்குதவி நல்குவாராயின், 
இவரால் அன்பு சிறக்கும்.

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

கொலை வெறி!

கொலை வெறி!

இறை மொழி: யோவான் 16:1-3.

1. நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

2. அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

3. அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.

இறை வழி:
வன் முறையாலே வென்றிட வெடிப்பார்,
வளராப் பிஞ்சு போலவே பழுப்பார்.
தன் வெறியாலே கொன்றிடத் துடிப்பார்,  

தப்புவதற்கு இறையும் இழுப்பார்.

நன்னிலப் பரப்பில் இறை என்ன வடிப்பார்? 
நன்மை தரவே நம்மை அழைப்பார்.

இன்னிலை அறிவார், அன்புதான் பிடிப்பார்.

யாவரும் வாழத்தான் உழைப்பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

சான்று!

சான்று!

இறை மொழி: யோவான் 15:26-27.

26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

27. நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.  

இறை வழி:

இறைவனின் சான்றாய் இந்நிலம் வந்த
இயேசுவின் சான்று, ஆவியரே.
முறை அறியாமல்  கூட்டிக்கழிக்கிற,
முதிரா நாமோ, பாவியரே.
திரை மறைவிருக்கும் தெய்வம் தந்த
தெளிந்த சான்று ஆவியரே.

சிறை விட்டகன்று, கறையுமழிக்கிற, 

செஞ்சான்றாவோம், பாவியரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏது இல்லை, எனினும்….

ஏது எதுவுமில்லை!
இறை மொழி: யோவான் 15:25.

25. முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

இறைவழி:
சூது என்பதை அறிவாய் நினைத்து,
சூழ்ச்சி செய்தல் அறமில்லை.
ஏது இல்லை, எனினும் இணைத்து,
எதிரி ஆக்குதல் அறமில்லை.
வாது செய்வதாய் தீதைப் பிணைத்து,
வாழ்வழித்தல் அறமில்லை.
தூது தருகிற இறையை அணைத்து,
துயர் போக்குல், அறமாகும்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

என்ன கற்கிறோம்?

வெறும் இளங்கலைப் பட்டமேயன்றி,
வேறு பட்டம் எடுக்கவில்லை.
அரும் செல்வமாய்த் தோண்டியெடுத்தும்,
அது பறக்கையில், தடுக்கவில்லை.
பெரும் பொருள் தேடி அலைந்தேனேயன்றி,
பிறப்பின் நோக்கம் கற்கவில்லை.
நறும் மணமாய் இறை நற்செய்தி தரவே,
நான் வேறிடம் நிற்கவில்லை!

-கெர்சோம் செல்லையா.

பகை ஏன்?

பகை!

இறை மொழி: யோவான் 15:24.

  1. வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

இறை வழி:

எத்தனையோ அருஞ்செயல்கள் செய்தும்,
இயேசுவைப் பலபேர் ஏற்கவில்லை.
அத்தனையும் நம் வாழ்விற்கிருந்தும்,
அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை.
இத்தனைப் பகையும் வெறுப்பும் எதற்கு?
ஏன் என எனக்கும் புரியவில்லை.
மொத்தமும் அலகையின் குடியிருப்பு;
மீளார் அறிவைத் தெரியவில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.