மறைவில் இருப்பவர்!

மறைவில் இருப்போர் பலருண்டு!

இறை மொழி: யோவான் 19: 39-40.

38. இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.

39. ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.

40. அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.

இறை வழி:

மறைவில் இருப்பவரானாலும்
மனதுள் அவரும் கிறித்தவரே.
திரைமுன் தெரியாதிருந்தாலும்,
தெய்வ அருளில் பெருத்தவரே.
இறையின் தெரிவில் யாருண்டு?
இங்கே கேட்டு குழம்பாதீர்.
நிறைவில்  காணும் பேறுண்டு;
நேர்மை மறந்து விளம்பாதீர்!

ஆமென்.

john19_38-39-new15.jpg

இறை வாக்கின்படி!

நிறைவேறும் இறைவாக்கு!

இறை மொழி: யோவான் 19:36-37.

36. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.

37. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.

இறை வழி:

முன்னே உரைத்த வாக்கொத்து,

முழுதும் வாழ்ந்த தெய்வ மகன்,

அந்நாள் உரோமன் நோக்கொத்து,

அருவிப் புனல் நீர் வடித்தார்.

பின்னே ஐயம் நமக்கெதற்கு?

பிறவிப் பயன் பெறுவதற்கு,

சென்னீராற்றில் இறங்கிடுவோம்.

சீரேசு நம் கை பிடித்தார்!

ஆமென்.

May be an image of waterfall and text that says 'There is a Fountain- 196 There is a fountain filled with blood Drawn from Immanuel's veins And sinners plunged beneath that flood Lose all their guilty stains:'

யோவான்!

யோவான்!

இறை மொழி: யோவான் 19:34-35.

34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

35. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

இறை வழி:

காட்டிக் கொடுத்தது போதாதென்று,

கை விட்டோடிய அடியரில்,

ஈட்டியால் வீரன் குத்துதல் கண்டு,

எதிரே நின்றவன் யோவான்.

நாட்டில் இன்று கிறித்தவரென்று,

நடனம் ஆடும் பொடியரில்,

மீட்டும் துணிவு எவனுக்குண்டு?

மிரள்வான், வீழ்ந்து போவான்!

ஆமென்.

May be an image of text

எலும்பு!

முறிக்க முயன்றும் முடியவில்லை!

இறை மொழி: யோவான் 19: 31-33.

31. அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

32. அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.

33. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.

இறை வழி:

பண்டிகை, சடங்கு விழாவென உழைத்தும்,

பண்பை வளர்க்க உழைக்கலையே.

சண்டியர் சேர்த்து தலைவராய்ப் பிழைத்தும்,

சமய அறிவில் தழைக்கலையே.

முண்டியடித்து உரிமையைப் பெற்றும்.

முழங்கால் முறிக்க முடியலையே.

மண்டையில் நான்கு எழுத்து கற்றும்,

மனம்மாறாவிடில் விடிவிலையே!

ஆமென்.

May be an image of 2 people, bone and text that says 'FULFILLED PROPHECY He GUARDS ALL HIS BONES NOT ONE OF THEM IS BROKEN. PSALM 34:20 ITISWRITTEN.com'

முடித்தார்!

முடித்தார்!

இறை மொழி: யோவா 19:30.

30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இறை வழி:

மூன்று பதினொரு ஆண்டுகள் வாழ்ந்து,

மும்மையின் நடுவர் முடிக்கிறார்.

தோன்றிய நாள் முதல் தொடாதிருந்து,

தொலையாத் தீவினை முடிக்கிறார்.

ஆன்றவர் அறிவார், அருட் பயன் பெறுவார்;

ஆண்டவர் திருப்பணி முடிக்கிறார்.

சான்றினைக் கொண்டோர் தொடர்கிறார்;

சாகா வாழ்வு பிடிக்கிறார்!

ஆமென்.

May be an image of text

விடாய்த்தவர் கேட்டார்!

வேட்கை!

இறை மொழி: யோவான் 19: 28-29.

28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

29. காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

இறை வழி:

உள்ளின் வேட்கை நிறைவேற்றும்

உன்னதர் திட்டம் முடிக்கையில்,

கள்வர் நடுவில் அவர் தொங்கும்,

கடைசி நேரம் நீர் கேட்டார்.

வெள்ளம் போன்று செந்நீரும்

வெகுமதி என்று வடிக்கையில்,

எள்ளிச் சிரிக்கிற இழிஞரிடம்,

ஏங்கி, இயேசு நீர் கேட்டார்!

ஆமென்.

May be an image of text that says 'to fulfill the Scripture He said... FTHIRST John John19:28 19:28 HIRST'

தாய்க்கொரு காப்பகம்!

தாய்க்கொரு காப்பகம்!

இறை மொழி: யோவான்:19:25-27.

25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

இறை வழி:

கதியற்று நிற்கும் தாயைக் கண்டு,

கை விட்டு ஓடும் பிள்ளைகளே,

விதியென்று இயேசு உரைத்தது கேட்டு,

விரையும் யோவான் பாருங்களே.

மதியற்று மனிதர் தள்ளுதல் கண்டு,

மறு வாழ்வளிக்கும் உள்ளங்களே,

துதி புகழ் அல்ல, தூக்கும் சிலுவை;

துன்பில் இன்பம் சேருங்களே!

ஆமென்.

May be a black-and-white image of one or more people

உடை உரிந்தார்!

உடை உரிந்தார்!

இறை மொழி: யோவான் 19:23-24.

23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.

24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

இறை வழி:

இருந்த சொத்து உடுத்திய உடைகள்;

இயேசுவினின்று உரிந்தார்கள்.

தெரிந்த மானம் மறைக்கா படைகள்,

திருடி, பங்கிடத் தெரிந்தார்கள்.

வருந்தி அழுது உடுத்தும் கைகள்,

வராதிருந்ததில் வியப்பில்லை.

திருந்தினால் தான் திறக்கும் பைகள்;

தேவை கனிவு, கயப்பில்லை!

ஆமென்.

May be an image of 1 person

ஆளுநர் வீம்பு!

ஆளுநரின் வீம்பு!

இறை மொழி: யோவான் 9:21-22.

21. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

22. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.

இறை வழி:

விருப்பமில்லாமல் விட்டுக் கொடுப்பார்

வீம்பின் சிகரம் தொட்டும் கெடுப்பார்.

நெருப்புப் பிளம்பாய்க் கட்டிப் பிடிப்பார்

நீராய் மாறி வெட்டியும் வடிப்பார்.

பொறுப்பில்லா இருமனத்தார் ஆள்வார்.

போன பின்னர், காட்டிலே தாழ்வார்.

கருப்புச் சின்னமாய்க் கேட்டில் வாழ்வார்,

கால் கை கட்டப் பட்டே வீழ்வார்!

ஆமென்.

May be an image of 2 people

A

இயேசுவே அரசன்!

இயேசு அரசன்!

இறை மொழி: யோவான் 19: 19-20.

19. பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.

20. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

இறை வழி:

எவ்வளவு முயன்று கெடுத்தாலும்

உண்மை ஒருநாள் வெளிப்படும்.

இவ்வளவு நிந்தை கொடுத்தாலும்,

இயேசுவே அரசன், எழுதப்படும்.

அவ்வளவு அறிவைப் பெற்றிருந்தும்,

அது புரியாமல் போனதே!

செவ்வளவு நேர்மை கற்றிடுவோம்;

செய்யும் இறையால் ஆனதே!

ஆமென்.

May be an image of text that says 'Meaning of the Inscription I.N.R.I. -IEVS N- NAZARENVS R- REX IVDAEORVM It is Latin which literally means: "Jesus of Nazareth, King of the Jews." Catholic Fortress'