மலர்ச்சியின் வழி!

மனந்திருந்துதலே மலர்ச்சியின் வழி! 

வளர்ச்சியின் பெயரால் ஆட்சிக்கு வந்தார். 

வறண்ட அறிவால் தீங்கே தந்தார்.


தளர்ச்சியூட்டும் தொற்றால் முழித்தார்.


தாங்குமிறையை மறந்தே பழித்தார்.

கிளர்ச்சி செய்வீர்  எனச்சிலர் சொல்வார்.  


கிறுக்குத்தனத்தால் யார்தான் வெல்வார்? 


மலர்ச்சி காண  விரும்பாதவர் யார்? 


மனம் திருந்தும் வழியிலே பார்! 

அறிவூட்டுதல்தான் நல்வழி ஆகும்.


அழுக்கும் தீங்கும் அதனால்  போகும். 


வெறியூட்டிடுவார் விழுவது பாரும். 


விதைப்பதுதானே விளைந்து சேரும். 


நெறிதவறாது வாழ்பவர் தேடும்.


நிறைய உள்ளார், அவரால் கூடும்.  


பறிகாரார்களும் திருந்திட ஓதும்.


 பாரை மீட்க அன்பே போதும்!

கெர்சோம் செல்லையா  

www.thetruthintamil.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *