பெருமை!

திமிராய்ப் பார்க்கிறவர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:9-12.

9   அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10  இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11  பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12  வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒரு முறை காசு கொடுத்து விட்டு,

ஊர் நிறை செல்வம் வேண்டுகிறார்.

இரு முறை நோன்பு எடுத்து விட்டு,

இதுவே வழியெனத் தோண்டுகிறார்.

தெரு வரைத் தம்மைப் புகழ்ந்துவிட்டு,

திமிராய்ப் பிறரை எள்ளுகிறார்.

திரு மறை கூறும் அன்பு விட்டு,

தேடின், தெய்வம் தள்ளுகிறார்!

ஆமென்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *