அழிக்கப்பட்ட கோயிலை நினைத்து,

அழாதீர் என்கிற ஆண்டவரால்,

விழிக்கச் செய்கிற தூதன் வந்தார்;

வெறொன்றெழுப்பத் தூண்டுகிறார்.

தெளிக்கப்பட்ட ஆகாய் உரையால்,

தெம்பைப் பெற்று அடியவர்கள்,

எழுப்புதலோடு பணியை முடித்தார்.

எளிய கோயிலில் வேண்டுகிறார்!

(ஆகாய்)

May be an image of text