எதிர் வரும் இயற்கை அழிவது கண்டு,

யோயெல் இறைவாக்குரைக்கிறார்.

புதிர் என்றவைகள் இருந்து கொண்டு,

புரிந்ததை யார்தான் நினைக்கிறார்?

அதி விரைவாக ஆவியர் வழங்கும்,

அருட் கொடைகளும் உரைக்கிறார்.

மதி நிறை மக்கள் மனமும் துலங்கும்;

மாயிறை நம்மை நினைக்கிறார்!

(யோவேல் 2:28-29).

May be an image of 1 person and text

துணையாய் வந்தவள் தூய்மையிழந்தும்,

துரத்த மறுக்கும் கணவனாய்,

மனையாள் ஒத்த இசரயெல்லரை,

மன்னிக்கிறார் ஓசியா.

இணையாள் இணைப்பு நிலைப்பு என்று,

இன்று கூட நினைப்பூட்டி,

அணையா விளக்கு ஏற்றுகின்றார்,

ஆண்டவராகிய மேசியா!

(ஓசேயா 3:19-20).

May be an image of 1 person and text

பன்னிரு அடியர் ஆவியில் பொங்கி,

பற்பல நாளில் வாக்குரைத்தார்.

அன்னிறை வாக்கை யூதரும் வாங்கி,

அக்கரையற்றே அவ மதித்தார்.

பின்னொரு நாளில் மீட்பர் பிறப்பார்;

பேசியபடியே எழுதி வைத்தார்.

சொன்னவர் மறவார் சொல்லும் துறவார்;

சொற்படி நிகழக் காத்திருந்தார்!

May be a graphic of text that says 'MINORPRO PRODHETS शेਖ HOSEA JOEL- AMOS - OBADIAH JONAH MICAH NAHUM- - HABAKKUK ZEPHANIAH- HAGGAI- ZECHARIAH MALACHI'