யோவான் 7:44-46.

நல்வழி:

பேச்சின் சிறப்பை இயேசுவில் கண்டு,

பிடிக்கப் போனோர் திரும்புகிறார். 

மூச்சாம் அன்பை வாழ்வில் கண்டு,

முடிவை மாற்றி, விரும்புகிறார். 

ஏச்சால் பலபேர் இகழ்தல் கண்டு, 

இறைவழி விட்டு திரும்பாதீர். 

நீச்சல் மாறும், நிறைவும் பாரும்;

நெறியிலா வாழ்வை விரும்பாதீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

தெரியாமல் பேசுகிறார்!

யோவான் 7: 40-43.

நல்வழி:


என்ன எதுவென அறியார் இன்று,

எழுந்து திரை முன் பேசுகிறார். 

சொன்ன சொல்லின் ஆழம் சென்று,

சோதிக்காமல், ஏசுகிறார். 

இன்ன வகையில் இருத்தல் அன்று;

ஏசுவின் அடியார் தேடுகிறார். \

பின்னல் சிக்கு பிரித்தல் நன்று. 

பேறு பெற்றோர் பாடுகிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

ஆவியர் அருளாறு!

ஆவியர் அருள்!


நற்செய்தி: யோவான் 7:37-39.

நல்வழி:


ஆறாய் ஓடும் ஆவியர் அருளை,

அடைவாய் அன்பா, வருவாயே. 

தேறாதழிக்கும் தீவினை களைய,

தெய்வ வாக்கும் பெறுவாயே.

பேறாய் வழியும் பேரின்பத்தை, 

பிறரும் அடையத் தருவாயே.

கூறாதிருப்பின், பழி எனக்காகும்;

கீழ்ப்படிந்தால், திருவாயே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

உடன் வருவது என்ன?

உடன் வருவது என்ன?


தொட்டுச் சுவைக்கின்ற,

தொள்ளாயிரத்து இன்பம்

விட்டுச் செல்லுகையில்,

விண் வழி  வர மறுக்க,

கிட்டும் இறையருளாம்,

கிறித்தின் மீட்புமட்டும்,

ஒட்டிப் பிடிப்பதென்ன?

உணர்வோரே, பெருகுக!

-கெர்சோம் செல்லையா.

வெவ்வேறு விதம்!

வெவ்வேறு கருத்துகள்!
நற்செய்தி: யோவான் 7:36.


36. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.  


நல்வழி:


பொருளறியாமல் புரட்டிப் பேசும்,

புனைவார் அலையும் புவியதனில், 

அருளின் வாக்கும் தலைகீழாகும்;

அன்னார் கலைகள் பரவுமெனில்.

இருளை இருளாய்க் காணும் கண்கள்,

என்னில் தாரும் நல் இறையே.

திருவருளால்தான் ஒளியே தெரியும்;

தெளிவு என்றும் உன் நிறைவே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

கோடி அருள்!

கோடி அருள்!

சினத்தால் அழிந்தோர் சில கோடி.

சிந்தியாதழிவோர் பல கோடி.

நினைத்தால் அழிக்கும் வெறி தேடி,

நீக்கார் விழுவார் வலு வாடி.

பிணத்தின் அமைதி போல் நாடி,

பேசாதிருப்பின் நல் நாடி.

மனத்தால் நாளும் இறை கூடி,

மன்னிப்பதாலே அருள் கோடி!

-கெர்சோம் செல்லையா.

சிதறடிக்கப்பட்டோர்!

சிதறடிக்கப்பட்டோர் சேர்க்கப்படுவார்!
நற்செய்தி: யோவான் 7:35.
35. அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?


நல்வழி:

சிதறிக் கிடந்த யூதரைப் போல்,

சிறைப்பட்டிருந்த என் இனமும்,

உதறிக் கொண்டு எழுவதற்கு,

உதவிகள் செய்தது யாராகும்?

கதறிக் கொண்டு முறையிட்டும்,

கண்ணீர் துடைக்க வரார் கண்டு, 

பதறித் துடித்து இறை தந்தார்

;பாடினேன், இயேசு பேராகும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

திருவட்டாறு!

திருவட்டாறு நோக்கி….


பிறந்த ஊரைப் பிரிந்த நெஞ்சம்,

பித்தாய் மாறாதிருப்பதற்கு,

திறந்த கையுள் அணைத்துத் தஞ்சம் 

தந்த சென்னை ஏதாகும்.

மறந்த  என்னை புதுக்கக் கெஞ்சும்,

மனதை மகிழ்விப்பதற்கு,

பறந்து நானும் ஊரைக் கொஞ்சம், 

பாரேன் எனில்  தீதாகும்!


-கெர்சோம் செல்லையா.  

யோவான் 7:32-34.

முறுமுறுப்பார்!


நற்செய்தி: யோவான் 7:32-34. 

நல்வழி:  

அறவழி கூறும் இடங்களில் இன்று,

அறியார் பலரும்  முறுமுறுப்பார்.

திறமிகு மாந்தர் அவரேயென்று, 

தெய்வ வாக்கும்  மறுதலிப்பார். 

குறை அறிவாரோ உணர்ந்து நின்று,

கிறித்துவை நோக்கி வேண்டிடுவார்.

நிறை வாழ்வளிக்கும் தெய்வம் ஒன்று, 


நேர்மையில் நடத்தி ஆண்டிடுவார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.