நெஞ்சில் காண்போம்!

நெஞ்சில் காண்போம்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:13-16.  

கிறித்துவில் வாழ்வு:  
நன்றாய் வேண்டல் செய்கின்றோம்;  
நல்லிறை நூலும் கற்கின்றோம்.  
சென்றார் வந்தார் நினையாமல்,  
செய்தியுரைத்தும் நிற்கின்றோம்.
என்றாலும் நாம் குறைகின்றோம்.  
எங்கெல்லாமோ பார்க்கின்றோம்.  
நின்றாள்கின்ற இறைமகனை,  
நெஞ்சில்கண்டு ஆர்ப்பரிப்போம்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.