கிறித்துவால் இணைகிறோம்!

கிறித்துவால் இணைகிறோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:17-19.
17 பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
18 அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பார்க்க விரும்பி வந்தவருண்டு;
பரமனின் செயலைப் பார்த்ததுமுண்டு.
தீர்க்க விரும்பி வந்தவருண்டு.
தீரா நோய், வினை தீர்த்ததுமுண்டு.
சேர்க்க விரும்பிச் சேர்ந்தவருண்டு;
செல்வ அருளைச் சேர்த்ததுமுண்டு.
கோர்க்க இயன்றவர் யார் இங்கு உண்டு?
கிறித்துவே இறையுடன் கோர்க்கிறார் இன்று!
ஆமென்.

Image may contain: text

பன்னிருவரில் ஒருவன்!

பன்னிருவரில் ஒருவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6: 14-16.
14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

கிறித்துவில் வாழ்வு:
இகம் மீட்க இறங்கிவந்த இறைவனவர்
ஈராறில் யூதாசை ஏன் இணைத்தார்?
அகம் பார்த்து முடிவெடுக்கும் அறிவு அவர்,
அடியானாய் அவனை ஏன் அணைத்தார்?
நுகமாகிச் சுமையாக இருக்கும் நாமும்,
நோகடித்தும் உயிரீந்து ஏன் காத்தார்?
நகம்போல விரலை நாம் காப்போம் என்று,
நம்பித்தான் யாவரையும் விட்டுவைத்தார்!
ஆமென்.

No automatic alt text available.

வேண்டல் என்னும் ஆயுதம்!

வேண்டல் என்னும் ஆயுதம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:12-13.
12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
தேர்வின் முன்பு வேண்டுதல் செய்யும்,
தெய்வ மகனைப்போல் இன்று,
யார் எவர் ஏற்றவர் என்று அறிய,
இந்தியர் வேண்டின் அது நன்று.
போர் வெறிகொண்ட அலகையைத் துரத்த,
பொழுது விடியுமுன் வேண்டிடுவோம்.
கூர் முனையுள்ள ஆயுதம் அதுவாம்;
கொண்டு நாட்டை ஆண்டிடுவோம்!
ஆமென்.

Image may contain: 3 people, including Daniel Joseph, people standing
LikeShow More Reactions

அழித்தல் அறிவா? ஆக்குதல் அறிவா?

அழித்தல் அறிவா? ஆக்குதல் அறிவா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:8-11.
8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு,
10 அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவும், திறனும், ஆற்றலும் எதற்கு?
அடுத்தவர் குடும்பம் கெடுப்பதற்கா?
வறுமை, கொடுமை பிடியிலிருந்து
வராது ஏழையைத் தடுப்பதற்கா?
முறிவைக் கட்டும் மருத்துவரையும்
முட்டாள் என்னும் உலகம் இது.
புரிவோம் உண்மை, போதும் தீமை;
பொய்க் கூத்தாடின் கலகம் அது!
ஆமென்.

Image may contain: text

நாள் பார்த்தல்!

நாள் பார்த்தல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:6-7.
6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
7 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்ய நாள் பார்க்காதீர்;
நாட்கள் யாவும் நல்லவையே.
இன்பம் பெருக இன்றே செய்வீர்;
இறைவன் தருவார் வல்லமையே.
பன்மை மக்கள் வாழும் நாட்டில்,
பலரது கருத்து வேற்றுமையே.
தன்மை புரிந்து நன்மை செய்வீர்;
தலைக்கனம் தராது ஒற்றுமையே!
ஆமென்.

Image may contain: text

மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!

மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:3-5.
3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமேதவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4 தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உணவின்றி வாடும் ஏழையைக் கண்டும்,
உதவாதிருத்தல் பெருங்கேடு.
பணம் பொருள் நிறைந்த வீடானாலும்,
பசியாற்றலையேல் சுடுகாடு.
குணம் என்று சொன்னால் கிறித்து போலாம்,
கொடுப்பதின் இன்பம் நீ தேடு.
மணத்தின் அருமை, பிணத்தில் தெரியும்!
மகனே, மகளே, இரங்கிவிடு!
ஆமென்.

Image may contain: 1 person, sitting and text