தங்கமகனின் தங்கச் சட்டம்!

தங்கமகனின் தங்கச் சட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:31.

31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எதை எதிர்பார்த்தோம் பிறரிடம்?
அதை அளித்தோமா அவரிடம்?
இதை எண்ணாது இவ்விடம்,
உதை படுகிறதே மானிடம்!
விதை நன்றோவென எண்ணுவாய்;
பதை பதைக்காமலே அறுப்பாய்.
கதை போல் வாழ்வு களிப்பாய்,
சிதை எரித்தாலும் வாழுவாய்!
ஆமென்.

Image may contain: text that says "Golden Rule do unto .thors asyou Would have them do unto you."

வாங்கினால் கொடாதோர்!

வாங்கினால் கொடாதோர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:30.

30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

கிறித்துவில் வாழ்வு:
வாங்கினால் கொடாத வஞ்சகரே
வர்த்தகர் வடிவில் வருகின்றார்.
தூங்கினார் இறைவன் எனக்கூறி,
துன்பம் மட்டுமே தருகின்றார்.
ஏங்குவார் ஏழையர் என எண்ணி,
எடுத்துக் கொடுப்பதே நம் கடமை;
தாங்குவார் இறைவன் நம்மையுமே;
தரணியில் யாவும் அவருடமை!
ஆமென்.

Image may contain: 5 people, people smiling, text

மறு கன்னம்!

மறு கன்னம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:29.
29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
கிறித்துவில் வாழ்வு:
அறைந்தவருக்கு உடலை விடுத்தீர்;
அம்மண நிலையில் உடையும் கொடுத்தீர்.
இறைமகனாயினும் பொறுமை காத்தீர்
எங்களை மீட்க வெறுமையும் பார்த்தீர்.
உறையின் கத்தி எடுக்காதென்றீர்;
உண்மைக்குயிரைக் கொடுத்து வென்றீர்.
மறைவழி  கன்னம் காட்டச் சொன்னீர்;
மறுக்குமிடத்தில் கொட்டுது சென்னீர்!
ஆமென்.

பழிக்குப் பதில் இறைவேண்டல்!

பழிக்குப் பதில் இறைவேண்டல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:28
28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
 
கிறித்துவில் வாழ்வு:
நன்மை என்னும் விதை விதைத்து,
நானும் பலநாள் வேண்டிட்டேன்.
என்ன ஏது எதுவென்றறியேன்;
ஏமாற்றமே கொண்டிட்டேன்.
தன்மையற்றோர் பழி விதைக்க,
தாவும் மரங்கள் கண்டிட்டேன்.
இன்று இதுதான் இயல்பு என்று,
இவர்களுக்காக வேண்டுகிறேன்!
ஆமென்.

பகை ஒழிக்கும் நன்மை!

பகை ஒழிக்கும் நன்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:27.
27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பகைவரை வெளியே ஒழிப்பதென்றால்,
பலுகிப் பெருகி அவர் வருவார்.
வகையாய் உள்ளில் பகை ஒழித்தால்,
வாழ்வில் அமைதி இறை தருவார்.
புகைபோல் வாழ்க்கை போகுமென்றால்,
புவியில் நிலைக்க என் செய்வார்?
தொகையாய் நன்மை பகைவருக்கும்,
தொடர்ந்து செய்து அவர் உய்வார்!
ஆமென்.

Image may contain: cat
LikeShow More Reactions

வறியரை நினைப்பீர்!

வறியரை நினைப்பீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:24-26.
24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25 திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நான்கு செல்வர் வளர்ச்சியிலே,
நாடே வளரும் என்போரே,
ஏங்குமெளியர் வாழ்க்கையிலே,
எவைகள் தேவை அறிவீரா?
தூங்குகின்றார் என நினைத்துத்
தூசாய் அவரைப் புறக்கணிப்பின்,
தாங்குமிறையின் திருவாக்கு,
தட்டிக் கேட்கும், தெரிவீரே!
ஆமென்.

No automatic alt text available.

வீடு பேற்றைத் தெரிவோம்!

வீடு பேற்றைத் தெரிவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:22-23.

22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
23 அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திட்டுவோரைத் திருப்பித் திட்டின்,
தீமை அன்று என்போரே,
வெட்டுவோரை வெட்டிப் போட்டால்,
வெறியும் சரிதான், என்பீரா?
கொட்டும் ஒருவர் சினத்தினாலே,
குடும்பம் தொலையும், புரிவீரா?
விட்டு விட்டுப் பொறுமை கொள்ளும்;
வீடு பேற்றைத் தெரிவீரா?
ஆமென்.

Image may contain: flower, plant, text and nature

உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?

உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?

வெறுப்பு என்னும் விதை விதைத்தால்,
விருப்பு என்னும் மரம் வருமோ?
பொறுப்பு இன்றி நாமும் வளர்த்தால்,
பூவும் கனியும் நலம் தருமோ?
மறுப்பு கூறுவர் இல்லை என்றாலும்,
மலிவாய்க் கிடைப்பது வெறுப்பன்றோ?
உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?
உள்ளம் கழுவுதல் பொறுப்பன்றோ?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 5 people, people smiling

கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!

கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:21.
21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
ஒண்ணோ இரண்டோ மூணோ என்றால்,
ஒருவழியாக முடக்கிடுவோம்.
எண்ண முடியா இன்னல்கள் வந்தால்,
எப்படி நாங்கள் அடக்கிடுவோம்?
கண்ணீரில்தான் கழுவியும் குளித்தும்,
காலம் முழுதும் கிடக்கின்றோம்.
விண்ணின் அரசே, விரைந்து வாரும்.
விடியலைத் தேடி நடக்கின்றோம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

அடியேன் விருப்போ, இறையரசு!

அடியேன் விருப்போ, இறையரசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:20.
20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.

கிறித்துவில் வாழ்வு:
வலியவர் உயர்ந்தவர் வாழ்விற்கென்று,
வழங்கும் அரசு, குறையரசு.
எளியவர் ஏழையர் உயர்விற்கென்று,
இயங்கும் அரசோ, நிறையரசு.
தெளிவுடன் நானும் தேடிப் பார்த்தேன்;
தென்படவில்லை, முறையரசு.
அளித்திடுவாரென நம்பவுமில்லை;
அடியேன் விருப்போ, இறையரசு!
ஆமென்.

Image may contain: cloud, sky, ocean, outdoor, text and nature
LikeShow More Reactions

Comment