உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்

உத்திரம் மறந்து துரும்பைத் திட்டும்,
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:41-42.

41 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

கிறித்துவில் வாழ்வு:
உத்திரம் ஒன்றைக் கண்ணில் வைத்து,
ஒருசிறு துரும்பைத் திட்டுகிறேன்.
பித்தளையாகப் பல்லை இளித்து,
பொன்மேல் சினத்தைக் கொட்டுகிறேன்.
நித்தமும் தவற்றால் நெஞ்சை நிரப்பி,
நிம்மதி இழந்து முட்டுகிறேன்.
பித்தனாய் நானும் மாறாதிருக்க
பேரருட் கதவைத் தட்டுகிறேன்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

செல்லேன்! செல்வேன்!

செல்லேன்! செல்வேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:39-40.
39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
குழி எது, குன்றெது அறியாதவரும்,
கொடுமை, நன்மை புரியாதவரும்,
வழி இது, வாழ்வது தெரியாதவரும்,
வழி காட்டுகிறார், செல்லேனே!
பழி இது, மீள்வது என நன்கறிந்து,
பண்பின் செயலை மட்டும் புரிந்து,
மொழிவது மெய்யோ எனத்தெரிந்து,
மொழிந்தால் அவருடன் செல்வேனே!
ஆமென்.