நம்பமாட்டார்!

நம்பமாட்டார்!

இவரெல்லாம் ஏன் இப்படிக் கெட்டார்?
என்று கேட்கப் பதில் என்ன இட்டார்?

தவறெல்லாம் இவர் சரியெனக் கேட்டார்;
தாய் தந்தை ஆசான் தவறி விட்டார்.

சுவரெல்லாம் இவர் படத்தைப் போட்டார்;
சூழும் உலகால் புகழப்பட்டார்.

கவலை கொண்ட கடவுளின் வீட்டார்,
கயமை என்பார், நம்ப மாட்டார்!

 
No automatic alt text available.

இறையிடம் பேசும்!

இறையிடம் பேசும்!
நற்செய்தி மாலை:மாற்கு:14:37-38.
“அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
ஆவியர் ஆள நம் ஆவியும் அடங்கும்;
அடங்கும்போதே, அறவழி தொடங்கும்.
சாவினை வழங்கும் ஊன்வழி முடங்கும்.
சரி செய்தாலே, சாத்தனும் மடங்கும்.
தாவிடும் குரங்கென இருந்தது போதும்;
தவற்றைத் திருத்துமே, தெய்வத்தின் தூதும்.
பாவியர் நெஞ்சைப் பழித்திடும் தீதும்,
பறந்துபோகுமே, இறையிடம் ஓதும்!
ஆமென்.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

நானும் குடிப்பேன்!

நானும் குடிப்பேன்!
நற்செய்தி மாலை: மாற்கு
“சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.36 ″ அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ″ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கையில் தந்த கிண்ணம் பிடித்தேன்;
கனவாய் நினைத்துக் கசப்பைக் குடித்தேன்.
பையில் இன்னும் இருப்பது கண்டு,
பதறி நானும் நெஞ்சு துடித்தேன்.
ஐயா, எனக்குப் போதும் என்று,
அவற்றை வீசி கையும் கடித்தேன்.
மெய்யானவரோ, என்னைப் பிடித்தார்;
மெதுவாய் எடுத்தேன், துன்பம் குடித்தேன்!
ஆமென்.

No automatic alt text available.

அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல்,
எவ்வளவென்று மலைக்கின்றார்.
இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி,
எளியரும் பண்பைக் கலைக்கின்றார்.
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி,
தரணியைச் சீர் குலைக்கின்றார்.
அப்படிப்பட்டோர் கையினில் மீள,
அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, text

இறப்பு என்னும் துயில்!

இறப்பு என்னும் துயில்!
நற்செய்தி மாலை:மாற்கு 14:32-34.
” பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ‘ நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
இறப்பைக் குறித்து எண்ணும்போது,
யாவரும் அடைவது திகிலாகும்.
எங்கு செல்வோம் என்றறியார்க்கு,
எட்டும் உயரம் முகிலாகும்.
பிறப்பின் பொருளை அறிவாருக்கு,
இறப்பு ஒருவகை துயிலாகும்.
பிறவி தந்த இறையுடன் இணையும்
பெரும்பேறுதான் ஒயிலாகும்!
ஆமென்.

No automatic alt text available.

சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!

சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:29-31.
” பேதுரு அவரிடம், ‘ எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவரோ, ‘ நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ‘ என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.”
நற்செய்தி மலர்:
உணர்ச்சிப் பெருக்கில் உரைப்பது எல்லாம்,
உண்மை என்றென எடுக்காதீர்.
மணக்கும் ஆவியர் திட்டம் என்றும்
மறைபொருள் விளக்கம் கொடுக்காதீர்.
இணக்கம் இல்லா முடிவும் வேண்டாம்;
இறையின் விருப்புள் தொடுக்காதீர்.
சுணக்கம் இல்லாச் சொல்லே போதும்;
சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
ஆமென்.

No automatic alt text available.