அரசனைப் பணிவோம்!

நல்வாக்கு: மத்தேயு 27: 11
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்”இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்டான். அதற்கு இயேசு, ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று கூறினார்.”

நல்வாழ்வு:
நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைக்கும்,
நன்மை யற்றோர் அரசரெனில்,
கேட்டை ஒழித்து, கூட்டை ஆளும்
கிறித்து நமக்கு வேந்தனன்றோ?
கோட்டை கொத்தளம் ஏறி இறங்கி,
கிறித்து அரசரைத் தேடாதீர்.
ஏட்டில் இறைவன் எழுதிய உண்மை
என்றும் ஆள இடங்கொடுப்பீர்!
ஆமென்.

Photo: அரசனைப் பணிவோம்!

நல்வாக்கு: மத்தேயு 27: 11

இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்

"இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்டான். அதற்கு இயேசு, ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று கூறினார்."

நல்வாழ்வு:

நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைக்கும்,

நன்மை யற்றோர் அரசனெனில்,

கேட்டை ஒழித்து, கூட்டை ஆளும்

கிறித்து நமக்கு வேந்தனன்றோ?

கோட்டை கொத்தளம் ஏறி இறங்கி,

கிறித்து அரசரைத் தேடாதீர்.

ஏட்டில் இறைவன் எழுதிய உண்மை

என்றும் ஆள இடங்கொடுப்பீர்!

ஆமென்.

எரேமியாவின் வாக்கும் இயேசுவின் வாழ்வும்

முன்னுரைத்த வாக்கு!

இறைவாக்கு: மத்தேயு 27: 9-10.
“இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ‘ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.”

இறைவாழ்வு;
நிலை குலைந்த மனிதரை மீட்டு,
நிம்மதி வழங்க வருபவரை
விலை மதிப்பு அறியாதவரோ
வெறுங்காசுகளில் அளக்கின்றார்.
இலை மறைவாய் இதை உரைக்கும்
எரேமி நூலை வாசிப்போர்,
குலை நடுங்கும் கொடுமையைக் கண்டு,
கிறித்துபின்னால் அழைக்கின்றார்!
ஆமென்.

Photo: முன்னுரைத்த வாக்கு!

இறைவாக்கு: மத்தேயு 27: 9-10.
"இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது."

இறைவாழ்வு;
நிலை குலைந்த மனிதரை மீட்டு,
நிம்மதி வழங்க வருபவரை
விலை மதிப்பு அறியாதவரோ
வெறுங்காசுகளில் அளக்கின்றார்.
இலை மறைவாய் இதை உரைக்கும்
எரேமி நூலை வாசிப்போர்,
குலை நடுங்கும் கொடுமையைக் கண்டு,
கிறித்துபின்னால் அழைக்கின்றார்!
ஆமென்.

காட்டு விலங்கும் நாட்டு மனிதனும்

நல்வாக்கு: மத்தேயு 27:6-8.
“தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ‘ இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ‘ என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ‘ இரத்த நிலம் ‘ என இன்றுவரை அழைக்கப்படுகிறது.
“நல்வாழ்வு:
காட்டில் வாழும் விலங்குங்கூட
கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.
கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்
கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.
நாட்டின் நடைமுறை இதுதானென்று
நானுமிருந்தது என் தவறே.
வீட்டில் இதனைக் காணும்போதோ,
விழுந்தழுதேன், என் இறையே!
ஆமென்.
Photo: நல்வாக்கு: மத்தேயு 27:6-8.

"தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது."

நல்வாழ்வு:

காட்டில் வாழும் விலங்குங்கூட

கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.

கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்

கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.

நாட்டின் நடைமுறை இதுதானென்று

நானுமிருந்தது என் தவறே.

வீட்டில் இதனைக் காணும்போதோ,

விழுந்தழுதேன், என் இறையே!

ஆமென்.

வருந்துதல் போதுமா?

நல்வாக்கு: மத்தேயு 27:3-5.

யூதாசின் தற்கொலை:

“அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ‘ பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ‘ என்றான். அதற்கு அவர்கள், ‘ அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ‘ என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.”

நல்வாழ்வு:
வருந்துதல் மட்டும் போதாது;
வாழ்வின் கறைகள் போகாது.
திருந்துதல் உள்ளில் இல்லாது,
தெய்வம் தொழுதல் செல்லாது!

இருந்து நன்மை சேர்ப்பதற்கு,
என் செய்வேன் எனக் கேட்பவர்க்கு,
விருந்து போன்றதே இறைவாக்கு;
வேண்டாம் தீய வழிப்போக்கு!
ஆமென்.

நல்வாக்கு: மத்தேயு 27:3-5.

யூதாசின் தற்கொலை:

"அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்."

நல்வாழ்வு:
வருந்துதல் மட்டும் போதாது;
வாழ்வின் கறைகள் போகாது.
திருந்துதல் உள்ளில் இல்லாது,
தெய்வம் தொழுதல் செல்லாது!

இருந்து நன்மை சேர்ப்பதற்கு,
என் செய்வேன் எனக் கேட்பவர்க்கு,
விருந்து போன்றதே இறைவாக்கு;
வேண்டாம் தீய வழிப்போக்கு!
ஆமென்.

தொடுவானத்தைத் தொடுவதற்கு……

தொடுவானத்தைத் தொடுவதற்கு……

விண்ணும் கடலும் தொடுவதைக் காண
விரைந்து அலைக்குள் நீந்துகிறேன்.
கண்ணில் காணும் வானமுந் தொடர,
கவலையின் நெஞ்சை ஏந்துகிறேன்.

மண்ணின் மனிதர் தருந்துயர் புதைக்க,
மறதிக் குழியைத் தோண்டுகிறேன்.
எண்ணிப் பார்க்க விரும்புவ தொன்றே;
இறையின் அருள்தான், வேண்டுகிறேன்!
ஆமென்.

தொடுவானத்தைத் தொடுவதற்கு......

விண்ணும் கடலும் தொடுவதைக் காண
விரைந்து அலைக்குள் நீந்துகிறேன்.
கண்ணில் காணும் வானமுந் தொடர,
கவலையின் நெஞ்சை ஏந்துகிறேன்.

மண்ணின் மனிதர் தருந்துயர் புதைக்க,
மறதிக் குழியைத் தோண்டுகிறேன்.
எண்ணிப் பார்க்க விரும்புவ தொன்றே;
இறையின் அருள்தான், வேண்டுகிறேன்!
ஆமென்.