அடித்துத் துப்பி அவமதித்தார்…

அடித்துத் துப்பி அவமதிப்பார்…
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
“ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ‘ யூதரின் அரசரே, வாழ்க! ‘ என்று சொல்லி ஏளனம் செய்தனர்; …

See More

அடித்துத் துப்பி அவமதிப்பார்...
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
"ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ' யூதரின் அரசரே, வாழ்க! ' என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்."

நல்வாழ்வு;
அடித்துத் துப்பி அவர் மகிழ்ந்தார்;
ஆடை உரிந்தும் அவமதித்தார்.
கடித்துக் குதறும் விலங்கு அவர்,
கனிவு இல்லாப் போர்வீரர்.

பிடித்துச் செல்லும் இம்மனிதர் 
பிறவாதிருப்பின் பேறடைவார்;
வெடித்துச் சிதறிய வாழ்வுற்றார்.
வேண்டாம் என்போர், கீழ்ப்படிவார்!
ஆமென்.

பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!

 

நற்செய்தி: மத்தேயு 27:25-26.
“அதற்கு மக்கள் அனைவரும், ‘ இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ‘ என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.”

நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.

அற்புதமாக நமைத் திருத்த
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள்
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.

பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!

நற்செய்தி: மத்தேயு 27:25-26.
"அதற்கு மக்கள் அனைவரும், ' இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ' என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்."

நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற 
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.

அற்புதமாக நமைத் திருத்த 
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள் 
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.