கலப்பையின் மேல் கைவைத்தேன்

நல்வாழ்த்து:
கலப்பை மேலே கையை வைத்துக்
கற்பாறையிலே உழுகின்றேன்.
நிலத்தடி நீரை மேலே கொணர்ந்து,
நித்தமும் செடிக்குப் பாய்ச்சுகின்றேன்.
விலக்கப்பட்ட களைகள் அகற்றி,
வேண்டிய உரமும் இடுகின்றேன்.
பலவித பணிகள் நான் செய்தாலும்,
பலனோ உம் அருள், பணிகின்றேன்!
நல்வாக்கு: மத்தேயு 26:23-25.
“அதற்கு அவர், ‘ என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ‘ என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ‘ ரபி, நானோ? ‘ என அவரிடம் கேட்க இயேசு, ‘ நீயே சொல்லிவிட்டாய் ‘ என்றார்.”

நல்வாழ்த்து:

உடன் பிறந்தோர் ஒளிந்திட்டார்;
உண்மை இன்றி மறைந்திட்டார்.
கடன் பட்டோர் கைவிட்டார்;
கவலைக் குழியில் தள்ளிட்டார்.
இடம் தெரியா என்னண்டை
இயேசு மட்டும் இருக்கின்றார்.
வடம் பிடித்து உயர்த்தி எனை
வாழ வைத்துக் காக்கின்றார்!
ஆமென்.