இணைக்கும் இறைப்பணி!
———————————
———————————
எளியோர் கடக்கும் இச்சிறு பாலமும்,
இணைக்கும் பணியைச் செய்கிறதே.
ஒளிமயமான இறையுடன் சேர்க்கும்
ஊழியம் பாலம் போன்றதுவே.
தெளிவைக் கொடுக்கத் தேவை எதுவோ,
தெய்வத்தின் ஆவி தந்திடுமே.
வளியாய், நீராய், நெருப்பாய் வந்து,
வழி நடத்தி இணைத்திடுமே!
-கெர்சோம் செல்லையா.