அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

நகைச்சுவை நற்செய்தி!
அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

அந்த நற்செய்தியாளர் அந்த திருக்கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் முன் இறைவேண்டல் ஏறெடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். தன் கணவன் குடித்துவிட்டுத் தன்னை அடிப்பதாகவும், அவர் மீட்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் வைத்தார். நற்செய்தியாளரும் வேண்டுதல் மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு, அவ்வூர் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அந்த நற்செய்தியாளர் முன் அந்த பெண்மணி வந்து, தன் கணவரைக் காண்பித்து, ‘இறையருளால் இப்போது இவர் திருந்தி விட்டார்; நாங்கள் மகிழ்வுடன் இருக்கிறோம்’ என்று கூறி, நன்றி மன்றாட்டு கூறிச்சென்றார்.

மீண்டும் அடுத்த ஆண்டிலும், அந்த ஊழியர் அந்த ஊர்த் திருக்கூட்டத்திற்குச் சென்றார். அந்தப் பெண்மணியைக் காணவில்லை. அவர் கணவர் வந்திருந்தார். அவர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இறைவேண்டல் ஏறெடுக்கக் கேட்டார்.
“முன்பு நான் குடித்து வந்து மனைவியை அடிப்பேன். அவள் அழுது வேண்டுவாள். இப்போது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்; குடிப்பதுமில்லை; அவளை அடிப்பதுமில்லை. ஆனால்….. அவள் இப்போது என்னை அடிக்கிறாள்! அய்யா, எனக்காக வேண்டுங்கள்; என் மனைவி திருந்த மன்றாடுங்கள்!”

“…சாரா ஆபிரகாமைத் தலைவர் என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.”(1 பேதுரு 3:6).

நகைச்சுவை நற்செய்தி!
அய்யா, என் மனைவிக்காக வேண்டுங்கள்!

அந்த நற்செய்தியாளர் அந்த திருக்கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் முன் இறைவேண்டல் ஏறெடுக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். தன் கணவன் குடித்துவிட்டுத் தன்னை அடிப்பதாகவும், அவர் மீட்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் வைத்தார். நற்செய்தியாளரும் வேண்டுதல் மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு, அவ்வூர் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அந்த நற்செய்தியாளர் முன் அந்த பெண்மணி வந்து, தன் கணவரைக் காண்பித்து, 'இறையருளால் இப்போது இவர் திருந்தி விட்டார்; நாங்கள் மகிழ்வுடன் இருக்கிறோம்' என்று கூறி, நன்றி மன்றாட்டு கூறிச்சென்றார்.

மீண்டும் அடுத்த ஆண்டிலும், அந்த ஊழியர் அந்த ஊர்த் திருக்கூட்டத்திற்குச் சென்றார். அந்தப் பெண்மணியைக் காணவில்லை. அவர் கணவர் வந்திருந்தார். அவர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இறைவேண்டல் ஏறெடுக்கக் கேட்டார்.
"முன்பு நான் குடித்து வந்து மனைவியை அடிப்பேன். அவள் அழுது வேண்டுவாள். இப்போது நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்; குடிப்பதுமில்லை; அவளை அடிப்பதுமில்லை. ஆனால்..... அவள் இப்போது என்னை அடிக்கிறாள்! அய்யா, எனக்காக வேண்டுங்கள்; என் மனைவி திருந்த மன்றாடுங்கள்!"

"...சாரா ஆபிரகாமைத் தலைவர் என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்."(1 பேதுரு 3:6).

Leave a Reply