மெசையா என்கிற மீட்பருளாளர்,

மேதினி ஆள வருவாரா?

அசையா அரசை அவரும் அமைத்து,

அன்புடன் நீதி தருவாரா?

இசைவாயெழுதிய இறைப்பேரரசை,

எந்நாட்டவரும் பெறுவாரா?

தசையாய் நாமும் உயிருள் இணைய,

தாமதியாயிறை வருவாரே!

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

May be an image of text