கேட்போமா இறைவாக்கு!

இனிய வாழ்வு தரும் இறைவாக்கு!

 நல்வாழ்த்து!
உயிர்த்த இயேசுவை வாழ்த்துகிறேன்;
உயிராயிருப்பதால் வாழ்த்துகிறேன்.
பயிற்சிக்காகத் துன்பங்கள்
பரிசாய் வரினும் வாழ்த்துகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:37-40.
”அதற்கு நேர்மையாளர்கள் ‘ ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ‘ என்று கேட்பார்கள். அதற்கு அரசர், ‘ மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ‘ எனப் பதிலளிப்பார்.”
நல்வாழ்வு:
இல்லாதவர்க்கு இரங்கிக் கொடுத்தால்,
ஈசன் கணக்கில் கடனாகும்.
எல்லாம் இயேசு என்று நினைத்தால்,
இனிய வாழ்வும் திடனாகும்.
பொல்லார் நல்லார் எனப் பிரிக்காமல்
புரியும் தொண்டே உயர்வாகும்.
சொல்லால் கூறிச் சென்றுவிடாமல்,
செயலில் வடித்தால் பெயர்கூறும்!
ஆமென்.

Leave a Reply