குற்றச்சாட்டு மாறுவதேன்?
இறை மொழி: யோவான் 18: 29-32.
29. ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
30. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
31. அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
32. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
இறை வழி:
இறைப்பழி சுமத்தி இயேசுவைக் கொல்ல
இவர்கள் முயன்று எழுந்தாலும்,
அறையும் படிக்குத் தீர்ப்பைச் சொல்ல
அது போதாதென அறிவார்கள்.
விரைவில் அழிவு வருவதைக் காட்டும்,
வியத்தகு கண்கள் இழந்தாரும்,
அரசைக் கவிழ்க்க ஆட்களைக் கூட்டும்
அநீதிப் பழிதான் தெரிவார்கள்!
ஆமென்.
