இப்படி இவர்கள் நடக்கும் நாளில், இன்னொரு வறட்சி காண்கையில், தப்பாய்ப் பேசித் தன் பற்றிழந்து, தண்ணீர்ப் பாறையை அடிக்கிறார். அப்படி மோசே ஆற்றிய தவற்றால், அடையும் கானான் இழக்கவே, ஒப்பரு இறையும், உள்ளம் கண்டு, ஊழியர் கை பிடிக்கிறார்! (எண்ணிக்கை 20:1-13 & இணைச்சட்டம் 34)