உயிர்த்தெழுதல்!

உயிர்த்தெழுதல்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:18-23.
“உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, ‘ போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே! ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
இறந்தபின் என்ன நடக்கும் என்று,
எவர்க்கும் தெளிவாய்த் தெரியாது.
இதனால் கேள்விகள் எழுவது இயல்பு;
இருப்பினும் பகடி கூடாது.
பிறப்பின் நோக்கம் தெரிந்தவர் இன்று,
பேசும் உயிர்ப்பின் பொருள் ஏது?
பேரருளாலே இறையுள் இணையும்,
பேறேயன்றி வேறேது?
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *