இறைவாக்கினருக்கு இங்கே மதிப்பில்லை!

இறைவாக்கினருக்கு இங்கே மதிப்பில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:21-24.
21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
மற்றவர் பார்வையில் சிறப்பைப் பெற்றும்,
மனையோர், ஊரார் மதிக்கவில்லை.
உற்றவர், உறவுகள் உதவிகள் உற்றும்,
ஒருவரைப் பார்க்கவும் விதிக்கவில்லை.
கற்றவர் வந்து ஏற்பார் என்றால்,
காட்சிக்கு விளம்பரம் பதிக்கவில்லை.
பொற்றவம் ஏற்ற உம்மைப் பார்த்தேன்;
பொறுமையில் குருதி கொதிக்கவில்லை!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *